நாள் 2245
- Link to Video: https://youtu.be/IBDqi8EDudE
- நாடுமுழுவதும் தமிழர்களுடையது – நிரூபிக்க வெளிநாட்டு தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை! உறவுகள் ஆவேசம்:
Link: https://samugammedia.com/the-entire-country-belongs-to-tamils–foreign-archaeologists-are-needed-to-prove-passion-for-relationships-samugammedia-1681461630 - நாடு தமிழர்களுடையது – நிரூபிக்க வெளிநாட்டு ஆய்வாளர்கள் தேவை..!
Link: https://ibctamil.com/article/country-belongs-to-tamils-1681459010
சிங்களவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, எமக்கு அமெரிக்கா , ஐரோப்பிய ஒன்றியத்தின் தொல்பொருள் ஆய்வாளர்கள் தேவை.
இன்று தமிழ் புத்தாண்டு. நமது தமிழர்கள் அனைவருக்கும் புதிய தமிழ் இந்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2245 நாள் இன்று.
இந்நாளில் நமது இந்து கலாச்சாரத்தையும் தமிழ் பாரம்பரியத்தையும் காப்பாற்ற வேண்டும்.
இந்து ஆலயத்தின் மீதான அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னால் இருப்பவர் ஜனாதிபதி ரணில்.
நல்லிணக்கம் மற்றும் நல்லாட்சி என அழைக்கப்படும் போது, சுமந்திரன் மற்றும் சம்பந்தனின் கீழ் TNA, ரணிளுக்கு 1000 விகாரைகளுக்கு தமிழ் தேசத்தில் அமைக்க வரவு செலவு திடத்தில் ஆதரவு வழங்கினார்கள் .
2000க்கும் மேற்பட்ட இந்து கோவில்கள் அழிக்கப்பட்டதாக அல்லது ஆக்கிரமிக்கபட்டதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இந்திய பிரதமர் மோடி மௌனமாக இருக்கிறார். இந்திய இந்து தீவிரவாதிகளும் அமைதியாக இருக்கிறார்கள்.
இலங்கையின் நீதித்துறை ஒரு நகைச்சுவையாக உள்ளது.
இந்து கோவில்கள் மீதான ரணிலின் அடக்குமுறையை தடுப்பதற்கு எவரும் உதவ மாட்டார்கள்.
வரலாற்று மற்றும் இனம் சாராத தொல்பொருள் ஆராய்ச்சியுடன் மட்டுமே நாம் செல்ல முடியும்.
முழுத் தீவும் தமிழர்களுடையது என்பதை நிரூபிக்க முடியும். மாத்தறைக்கு அருகாமையில் தெற்கில் ஒரு சிறிய பகுதியில் சிங்களவர்கள் வாழ்ந்ததாக மகாவம்சம் கூட கூறுகிது . சில ஏக்கர் நிலத்தில் துட்ட கைமுனு முழங்கால்களை முடக்கி உறங்கிக் கொண்டிருந்தான். ஏனென்றால் தீவு முழுவதும் தமிழர்கள் இருக்கிறார்கள் என்றான் .
சமீபத்தில் ஒரு தமிழர் தென்னிலங்கையில் உள்ள பழங்கால நிலப் உறுதியை கண்டறிவதற்காக சில ஆராய்ச்சிகளை மேற்கொண்டபோது, ஒரு காணி உறுதி பாத்திரத்தில் பூர்வீக உரிமையாளர் வெள்ளைப்புலி என்ற தமிழர் என்பதைக் கண்டறிந்தார்.
திசை மாறிய முனை, கதிர்காமம் அனைத்தும் புலப்படும் சான்றுகளை ஆதரிக்கின்றன.
அமெரிக்காவில் மட்டுமே மேம்பட்ட தடயவியல் ஆராய்ச்சி சாதனம் மற்றும் உபகரணங்கள் உள்ளன. இந்த தீவு யாருக்கு சொந்தமானது என்பதைக் கண்டறிய, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு வர வேண்டும்.
இப்போது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து எங்களுக்கு மற்றும் ஒரு உதவி தேவை தேவைப்படுகிறது, அதாவது இந்தத் தீவின் உரிமையாளர்கள் தமிழர்களளே , சிங்களவர்கள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும்.
நன்றி செயலாளர்
கோ.ராஜ்குமார் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.
ஏப்ரல் 14, 2023