நாள் 2175
வாக்கெடுப்பு என்பது பூர்வீக தமிழ் இனத்தின் சுயநிர்ணய உரிமையாகும் இன்று உலகத்தை வாக்கெடுப்புக்கு அழைக்காமல் கரிநாள் என்று சொல்லி பயனில்லை
இன்று 2175வது நாள், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டறியவும் எதிர்காலத்தில் தமிழர்களை காப்பாற்றவும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டம் தொடர்கிறது.
இன்று 75 வருடங்களுக்கு முன்னர், சிங்கள சுதந்திரத்திற்கு முந்தைய நாள், ஆனால் தமிழர்கள் இவ்வளவு பேரழிவை நினைத்துப் பார்த்ததில்லை.
சிங்கள சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் தமிழ் தலைவர்கள் எதிர்கால நோக்கு இல்லாமல் பல தவறுகளை இழைத்தனர்.
அவர்கள் கொழும்பு ஆடம்பர வாழ்க்கையை விரும்பினர், அவர்கள் வடகிழக்குக்கு திரும்ப விரும்பவில்லை. சுதந்திரக் போராட்ட காலத்தில் தமிழ்த் தலைவர்கள் தமிழ் இறையாமையையோ சமஷ்டியையோ கேட்காததற்கு கொழும்பு ஆடம்பர வாழ்க்கையே காரணம்.
எந்த நாட்டிலும் பயன்படுத்தப்படாத ஒரு மாயை 50/50 அரசியல் அதிகாரம் என்று தமிழர்கள் பேசினர்.
பின்னர் சமஷ்டி பற்றி தொடர்ந்து பேசினார்கள் , ஆனால் சமஷ்டி பற்றி பேசுவதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் மறுக்க முடியாத சுயநிர்ணய உரிமையை மறந்துவிட்டார்கள்.
தமிழர்கள் பல தவறுகளை இழைத்தார்கள், சி.சுந்தரலிங்கம் தான் முதலில் சிங்கள ஆட்சியை ஏற்று, டி.எஸ்.சேனநாயக்கா அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றார். சில வருடங்களின் பின்னர் தமிழீழத்திற்கு அழைப்பு விடுத்தார்.
பல தமிழர்கள் சுந்தரலிங்கத்தைப் பின்பற்றி சிங்கள அமைச்சரவையில் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக தமிழ் அரசியல்வாதிகள் தமிழர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் இருப்பை மறந்துவிட்டனர்.
தந்தை செல்வா 3 தசாப்தங்களாக சமஷ்டிசிக்காக குரல் கொடுத்தார், பின்னர் ஜி.ஜி.பொனம்பலம் மற்றும் மு. திருச்செல்வம் ஆகியோருடன் இணைந்து தமிழீழம் வேண்டும் என்று குரல் கொடுத்தார்கள் .
அதன்பின்னர் வந்த சம்பந்தன்-சுமந்திரன் குழு, எமக்கிருக்கும் 75 வருட அரசியல் அனுபவம்,சிங்கள அரசுக்கு எதிரான 35 ஆண்டுகால போர் மற்றும் அதன் வலிமை, போர்க்குற்றங்கள், இனப்படுகொலை, சர்வதேச நீதி உள்ளிட்ட அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, எமது உரிமைகளை “எக்கிய ராஜ்ஜா” மூலம் எப்படிப் பெறுவது என்பது தெரியும் என்று கூறினர்.
இப்போது இந்த சம்பந்தன்-சுமந்திரன் அவர்கள் தங்கள் நலனுக்காக தமிழர்களை ஏமாற்றினார்கள் என்பது தெரிந்தது.
13வது திருத்தம் ஏற்கனவே இலங்கையின் நீதித்துறையால் நிர்வாணமாக்கப்பட்டு பிண்டமாகிவிட்டது . மேலும் 13வது திருத்தம் ஒற்றையாட்சி சிங்கள ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த காரணத்திற்காக, 13 வது திருத்தம் தமிழர்களின் விருப்பமல்ல. 1987இல் தமிழ்த் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது, 13வது திருத்தம் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து போர் ஆரம்பமானது.
தயவு செய்து 13வது திருத்தத்தையோ சமஷ்டிசயையோ கோராதீர்கள், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை கோருங்கள். தமிழர்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் பொதுவாக்கெடுப்பு நடத்துவதன் மூலம் தமிழ் இறையாமையை பெற முடியும்.
எமது இலக்கான தமிழர் இறையாண்மையை அடைவதற்கு எமக்கு ஒரு பாதை உள்ளது. தமிழக முதல்வர் அவர்கள் தமிழக சட்டசபையில் தனது உரையின் போது நமது இலக்கை எப்படி அடைய வேண்டும் என்று வழிகாட்டினார்.
தாயகத்தில் உள்ள தமிழர்களாகிய நாமும், புலம்பெயர் தமிழர்களும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கடுமையாக உழைத்து வருகிறோம்.
ஆனால் இரு தினங்களுக்கு முன், இந்த தமிழ் அரசியல்வாதிகள் அமெரிக்க அதிகாரிகளை சந்தித்த போது, அவர்கள் தமிழ் பொது வாக்கெடுப்பு கேட்கவில்லை, இரண்டு இனக் கட்டமைப்புகளுடன் வேலை செய்யாத சமஷடியை மட்டுமே கேட்டார்கள்.
எமது தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழர்களும் காலதாமதமின்றி பொதுவாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என வேண்டி , பிரார்த்தனை செய்கிறோம்.
நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.
3/2/2023