Referndum

referendum3

referndum4

ஐ.நா. பொது சன வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை: வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள்

வவுனியா காணாமல் போனோர் பெற்றோர்கள் : ஐ.நா. பொது சன
வாக்கெடுப்புக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் உதவி தேவை

வவுனியா காணாமற்போனோரின் பெற்றோர்கள் மனித உரிமைகள் தினத்தை அடையாளப்படுத்தும் போது கீழ் உள்ள அறிக்கை வெளியிடடனர். தமிழர்களுக்கு எப்படியான அரசியல் தீர்வு தேவை என்பதைத் தெரிந்துகொள்ள ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தா வேண்டும் என்று வவுனியா காணாமற்போனோரின் பெற்றோர்கள் வேண்டிகிறார்கள் .

சிங்கள தமிழ் முகவர்கள் (சம்பந்தன், சுமந்திரன்) ஒரு தீர்வை கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக ஐ.நா. வாக்கெடுப்பு நடத்தா வேண்டும் என்பது தான் இவர்கள் முடிபு.

தமிழ் புலம்பெயர்ந்தோர் இந்த ஐ.நா. வாக்கெடுப்புப்பை வரவேற்கிறார்கள்.

திரு. ராஜ்குமார் அவர்களால் வழங்கப்பட்ட உரையை இங்கே காணலாம்: (தலைவர் – தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கம்..
மற்றும் பொதுச் செயலாளர் – வவுனியா மாவட்ட குடிமக்கள் குழு.)

இன்று மனித உரிமை தினம். இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்ட நமது அன்பானவர்களை நினைவில் வைத்துக்கொள்வோம்.

இந்த மனித உரிமைகள் தினம் இந்த உலகில் இனப்படுகொலைகளை தண்டிப்பதற்கும் நிறுத்தவதற்கும் தொடங்கியது.

கடந்த வாரம் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா.வில் ஒரு கூட்டம் நடந்தது, இந்த கூட்டம் இனப்படுகொலைகளை எவ்வாறு தடுப்பது என்பது பற்றியதாகும். நிபுணர்கள் தெரிவித்தனர்: இனப்படுகொலைகளை எளிதில் நிறுத்தப்பட முடியாது. ஏனென்றால், இனப்படுகொலை பற்றி பிரசங்கிப்பது பெற்றோரும், மதகுருமாரும். இதை இளம் வயத்தில் சொல்லி ஊக்கப்படுத்துவார்கள். இதனால் தான் இதனை நிறுத்துவது கடினம்.

ஜனநாயகம் என்பது இனப்படுகொலைகளைத் தடுக்கக்கூடிய ஒரு கருவியாகும் என பெரும்பாலோர் நம்புகிறார்கள். ஆனால் சில நாடுகளில், ஜனநாயகமத்தை நேர்மையற்ற வழியில் தங்கள் இனப்படுகொலைகளை தொடர பாவிக்கிறார்கள் .

1948 ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியின் பின்னர், இலங்கையின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளவோம். சிங்களவர்கள் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் நிலங்களை கைப்பற்ற ஆரம்பித்தனர். பின்னர் 1958 முழு அளவிலான இன கலவரங்கள் தொடங்கினார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

இராணுவ அதிகாரத்தை, அச்சுறுத்தலை , அடக்குமுறையை , மதச்சார்பின்மை விளக்கத்தை , மகாவலி விரிவாக்கத்தை , பொய்யான தொல்பொருள் சான்றுகளை , காடுகளை பாதுகாத்தலை மற்றும் இன்னும் பல காரணங்களை பாவித்து சிங்களம் தமிழ் நிலங்களை பறிக்கிறது.

சிங்களத்தின் போரை, பயங்கரவாதத்தை தடுத்தல், வேலைவாய்ப்பு மற்றும் கல்விப்பிரிவு பாகுபாடு ஆகியவை பல புத்திஜீவி இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன.

ஒவ்வொரு நிகழ்வையும் பாருங்கள், இது அனைத்தும் இனப்படுகொலையும் ஆகும்.

நல்ல ஜனநாயகம் எப்போதும் நல்ல முடிவுகளைத் தருகிறது. வாக்கெடுப்பு ஜனநாயகத்தின் ஒரு விளைபொருளாகும். அமெரிக்காவில், கிட்டத்தட்ட எல்லாமே வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்யப்படும். உதாரணமாக, இரண்டு ஆண்களுக்கு இடையே திருமணம் வாக்கெடுப்பு மூலம் அனுமதிக்கப்படுகிறது.

தமிழர்களுக்கு ஐ.நா. ஆதரவுடன் வாக்கெடுப்பு தேவை, இதன் மூலம் தான் நமக்கு என்ன வகையான அரசு தேவை என்பதை தீர்மானிக்க வேண்டும்.

நாம் ஐ.நா. பொதுச் செயலாளர் கேட்கின்றோம் ஒரு ஐ.நா. ஆதரவுடன் வாக்கெடுப்பை வட- கிழக்கில் நடத்த உதவவும்.

தமிழ் மக்கள் எமது தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். நோவாவால் அனுப்பப்பட்ட ஒரு காகத்தைப்போல் அவர்கள் செயல்படுகிறார்கள். தமிழர்களின் போராட்டத்தை அவர்கள் மதிக்கவில்லை. அவர்கள் ஒரு அரசாங்கத்தை உருவாக்க ரணிலுக்கு உதவ விரும்புகிறார்கள். அவர்கள் இந்த அரசாங்கம் மூலம் சலுகைகளையும் பதவிகளையும் தொடர்ந்து அனுபவிக்க விரும்புகிறார்கள்.

இன்று அழிவு பாதையில் இலங்கை ஜனநாயகம். இவர்கள் அரசியலமைப்பை மீறுகின்றார்கள் . அன்று ஆங்கிலேயர் புறப்படுவதற்கு முன்னர்,பிரபு சோல்பரி, சிறுபான்மையினரை காப்பாற்றுவதற்காக இலங்கை அரசியலமைப்பில் ஓர் சடடத்தை இணைந்திருந்தார். இந்தத் திருத்தத்தை முதலில் நீக்கியது சிங்கள அரசாங்கமே.

கொழும்பில் தற்போதைய நிலைமை மோசமானது, இந்நிலை ஒவ்வொரு தமிழரையும் ஐக்கிய நாடுட்டின் வாக்கெடுப்பு ஒன்றைக் கேட்பதற்கு துணித்து விட்டார்கள்.

வாக்கெடுப்பு என்பது ஜனநாயகத்தின் ஆரோக்கியமானதும், சொத்துரிமைமாகும்.

இறுதியாக, தற்போதைய நிலைமைகள் பற்றி தமிழர்கள் பயப்படுகிறார்கள். ஸ்ரீலங்கா எந்த நிகழ்வுகளையும் தமிழர் களுக்கு எதிராக சாத்தியமாக்க கூடியவர்கள். சுமந்திரன் எஸ்.டீ .எப் (STF பாதுகாப்பை எப்படி பெறறார் என்பதை நினைவுபடுத்துகிறோம், இப்போது பல தமிழர்கள் மட்டகிழப்பு நிகழ்வின் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நாங்கள் அமெரிக்காவுக்கு நன்றி கூற வேண்டும் , அவர்கள் எங்களுக்கு நெருக்கமான கடலலில் நிற்கிறார்கள் .

அவர்கள் எங்களுக்கு இன்னும் நெருக்கமாக வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,

நாங்கள் திருகோணமலை கூறுகிறோம் . தமிழர்களுக்கு அமெரிக்கா மட்டுமே இப்போது பாதுகாவலர்.