Screen Shot 2021-01-23 at 10.20.31 PM

Screen Shot 2021-01-23 at 10.09.47 PM

Screen Shot 2021-01-23 at 10.09.47 PM

பொதுசன வாக்கெடுப்பினை கோர இதுவே தருணம்!

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்.

Links:
Tamilwin
athavannews
TamilMurasu

தமிழர்களிற்கு பொதுசன வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால், வேறு சந்தர்ப்பங்கள் எங்களுக்குத் கிடைக்காது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 1436ஆவது நாளாக சுழற்சி முறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவரும் நிலையில் அவர்கள் போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த எம்மை ஜனவரி 26, 2017 அன்று அன்றைய பாதுகாப்புச் செயலாளர் ருவான் விஜயவர்த்தன பார்வையிட்டு 14 நாட்களுக்குள் தீர்வு வழங்கும் நிமித்தம் அலரி மாளிகையில் எங்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

குறித்த சந்திப்பு பெப்ரவரி 09, 2017 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. சுமந்திரனின் பங்கேற்பு காரணமாக அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன.

ஆனால் இது திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட தந்திரமாகவே நாம் பார்த்திருந்தோம். அந்தவகையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்தி அலரிமாளிகைக்கு அழைத்து எங்களை ஏமாற்றி இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகிறது.

இச் சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை எங்களிடம் கொண்டு வாருங்கள், அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவியுங்கள், பயங்கரவாத தடை சட்டத்தை அகற்றுங்கள் போன்ற. பின்வரும் கோரிக்கைகளை நாங்கள் இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்தோம்.

ஆனால் அது எவையும் நடந்தேறாமல் நாம் ஏமாற்றப்பட்டோம். தந்தை செல்வாவைப் போல இலங்கையுடனான எந்தவொரு பேச்சுவார்த்தையும் பயனற்றது என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

அதற்காகவே அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை அழைக்க நாங்கள் முடிவு செய்ததற்கான காரணம். எனவே தமிழர்களின் தேவை பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட அரசியல் தீர்வுஒன்றே.

கடந்த தேர்தலில், இரண்டு முக்கிய தமிழ் கட்சிகள் பொதுசன வாக்கெடுப்புக்கு உறுதியளித்தன, ஆனால் இந்த கட்சிகள் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு
அனுப்பப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட யு.என்.எச்.ஆர்.சி தீர்மானத்தில் பொதுசன வாக்கெடுப்பை சேர்க்கத் தவறிவிட்டன.

நமக்கு என்ன தேவை என்று கேட்க வேண்டுமே தவிர நாம் மற்றவர்களுக்கு செவிசாய்க்கக்கூடாது. எங்களுக்கு வாக்கெடுப்பு தேவை என்று ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவுக்கு சொல்ல இதுவே சிறந்த தருணம்.

இந்த நேரத்தை நாங்கள் தவறவிட்டால், வாக்கெடுப்புக்கு கோர வேறு எந்த நேரமும் எங்களுக்குத் கிடைக்குமோ தெரியாது. தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கையில் வாக்கெடுப்பு என்ற விடயத்தை சேர்க்க மறுத்துவிட்டன என்பது ஒரு மர்மமாகும்.

தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண ஆங்கிலேயர்கள் ஆர்வம் காட்டவில்லை. தமிழர்கள் சிங்களவர்களின் அடிமைகளாக வாழ்வார்கள் என்று நினைத்தமையால், அதற்கேற்றாற்போலவே TNA, சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரை பார்க்கும்போது அது உண்மையாக இருக்கிறது.

தமிழர்கள் தாங்கள் அடிமை வர்க்கம் என்று நினைக்கும் வரை, இலங்கையில் எதுவும் தமிழர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்காது என குறிப்பிட்டுள்ளனர்.

0-02-06-b8547cb4bc1c67eeff8743685c7c9ad8d2dd31dda6f6200f9737e9ba1612fc9b 1c6d9f2fb3516c

0-02-06-9ebc12ecf62a4dc979baff24b529ba3289a2b3c1952fe2af77c1a22bc458c84e 1c6d9f2fb3a038