1

TNA விஞ்ஞாபனம்: சுமந்திரன் ஒரு மந்திரி பதவியை பெறுவதற்கு, கையாளும் தந்திரம்

கண்ணீரில் வவுனியா இன்றுடன் 1250 நாட்கள் போராட்டம்

TNA விஞ்ஞாபனம் -2020

வடகிழக்கு இணைப்பு இல்லை, தமிழ் இனப்படுகொலை இல்லை, சர்வதேச விசாரணை இல்லை, ஸ்ரீலங்காவில் தமிழ் இனம் என்று ஒன்று இல்லை, ஆனால் தமிழர்கள் ஒரு குலுமம்- ஒரு குழு மக்கள் என்கிறார்கள் TNA

எக்கிய ராஜ்ஜ உண்டு , புத்த மதத்திற்கு மிக முக்கியமான இடம் உண்டு .

காணாமல் ஆக்கப்பட எங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பதற்கான எங்கள் போராட்டத்தின் இன்று 0r 1250 வது நாள்.

2 நாட்களுக்கு முன்பு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவர்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. சில முக்கியமான விஷயங்களை நாங்கள் கவனித்திருக்கிறோம், அவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

அவர்களின் அறிக்கையின் அடிப்படையில், அடுத்த தேர்தல் முடிவதற்குள் தமிழர்கள் அடிமைப்படுத்தப்படுவார்கள்.

இந்த அறிக்கையை நாம் பார்க்கும்போது, ​​சிங்களவர்களைப் பிரியப்படுத்தும் செய்தியாகத் தெரிகிறது. சிங்கள செய்தி ஊடகத்துடன் சுமந்திரனின் கடைசி நேர்காணலை நீங்கள் கேட்கும்போது, ​​தமிழர்களை பயங்கரவாதிகள் மற்றும் கீழ்த்தரமானவர்கள் என்றும் சிங்களத்தை மகிழ்வித்தார். ராஜபக்சர்களையும் , சிங்கள மக்களையும் மகிழ்ச்சி அளிப்பதற்கு சுமந்திரனின் செயல்.

இவை யாவும் சுமந்திரன் ஒரு மந்திரி பதவியை பெறுவதற்கு, கையாளும் தந்திரம்.

இந்த தேர்தல் அறிக்கையில், தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய சில கதைகளை அவர்கள் கூறுகிறார்கள், ஆனால் தமிழரின் துன்பத்திற்காக அவர்கள் என்ன செய்தார்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. எங்களுக்குத் தெரியும், அவர்கள் எதுவும் செய்யவில்லை.

அவர்கள் சில அரசியல் கைதிகளையும் நிலங்களையும் விடுவித்ததாக அவர்கள் குறிப்பாக மட்டகிளப்பு முன்னாள் எம்.பி. அரியேந்திரன் கூறினார். உண்மையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நேரடி அழுத்தத்திலிருந்து அரசாங்கத்தால் செய்யப்பட்டவை. சில சந்தர்ப்பங்களில் சில திறமையான வழக்கறிஞர்களால் நிலங்களும், கைதிகளும் விடுவிக்கப்பட்டனர்.

தேர்தல் அறிக்கையில் சில புள்ளிகள் இங்கே:

“அரசியல் சாசனம்” என்ற பெயரில் ஓர் அடிமை சாசனம் வரப்போகிறதாம்.

சமஷ்டி இல்லை என்பதை TNA இப்படி எழுதுகிறது: “ஒன்றுபட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அதிகாரத்திற்காக பாடுபடுவோம்”

தமிழர் ஒரு இனம் மில்லையாம் ஏன் என்றால், TNA சொல்லுகிறது: “தமிழர்களாகிய நாங்கள் தனிச் சிறப்புமிக்க மக்கள் குழாமாவோம்.”

“கூட்டுறவு சமஷ்டியில் நான் திடமான நம்பிக்கை கொண்டவன்” என்பதையும் மோடி குறிப்பிட்டார் என்று TNA எழுகிறது. அர்த்தம் அற்ற கூற்று. இது பற்றி TNA மோடி பேசிய பின், முதல் தடவையாக ஒரு செயல் இல்லாமல் கூறுகிறது.

“இறையாண்மை என்பது மக்களிடமே உண்டு, அரசிடம் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுதியாக வலியுறுத்துகின்றது.” என்று கூறுவது முழு முரண் பட்டது. இறையாண்மை என்பது ஒரு அரசிடம் தான் உள்ளது.
சுய நிர்ணயம் என்பது இறையாண்மை.

“ஒரு ஜனநாயகத்தில் அரசாங்கம் என்பது ‘மக்களால் மக்களும் மக்களின் அரசாங்கமும் மக்களுக்கான அரசாங்கமும்’ ஆகும்.” என TNA கூறுவது, சிங்கள அரசாங்கத்தை, ஒரு நக்கு அரசியல். ஏனெனில், ஸ்ரீலங்காவில் ஜனநாயகம் என்பது தமிழர்களுக்கு அல்ல, சிங்களவர்களுக்கானது.

“தேசிய நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கு நேர்மையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போதெல்லாம், அதற்கீடாக பரஸ்பரமாக செயற்பட நாம் கடமைப்பட்டுள்ளோம்.” இதை TNA கூறும் போது கடந்த காலத்து நல்லிணக்கம் தான் ஞாபகம் வருகிறது. நல்லிணக்கத்தில் இந்து கோவிலில் பௌத்த பிக்குவை எரித்தது, கிண்ணியாவை பிரிக்க முயன்றது, சிங்கள குடியேற்றம், 1000 புத்த விகாரைக்கு அனுமதி அளித்தது என்று பல.

“ஒன்றுபட்டதும் பிளவுபடாத பிரிக்க முடியாத ஒருமித்த இலங்கைக்குள் வன்முறையற்ற சமாதான வழிமுறைகளில் அமைந்த பேச்சுவார்த்தையூடாக நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.” என்பது இந்த TNA எமது விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்தினம்.

இலங்கைக்குள் நீதியை நிலைநாட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் செயல்பட்ட போதிலும்,” என்பது சர்வதேச விசாரணைக்கு தாரை வார்ப்பது.

கருத்துச் சுதந்திரமும் குழுமச் சுதந்திரமும், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும், அரசியல் கைதிகள், சமூக-பொருளாதாரப் பாதுகாப்பு, இடம்பெயர்ந்த மற்றும் நில உரிமைகளின் உரிமைகள், இடம்பெயர்ந்தோரின் உரிமைகள் மற்றும் காணி உரிமை பற்றியவை பற்றி கதை தான் எழுதிக்கிறார்கலே தவிர, தாம் இதை பற்றி என்ன செய்தார்கள் என்று கூறவில்லை. கூறவும் முடியாது.

“முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை மீள்கட்டியெழுப்புதல்” பற்றி எழுதியவர்கள் இப்போது எம்மக்கு தெரிந்த அளவில் 20 முன்னாள் போராளிகள், சுமந்திரனின் பாது காப்பு காரணமாக கால வரை இன்றி பூசா மறியலில்.

TNA இவர்களுக்கு உதவி செய்வோம் என்பது கசப்பாய் உள்ளது.

” பாலின சமத்துவம்.” பற்றிTNA இவ் அறிக்கையில் கூறும் போது, நாம் காணாமல் ஆக்கப்படோரின் தார்மார்கள், அனந்தி, விமலேஸ்வரி, மற்றும் தமிழரசு மகளிர் அணி, மற்றும் சசிகலா ரவிராஜ் ஆகியோருக்கு செய்த அநீதிகளை கேடட்டால் தெரியும்.

“சர்வதேச சமூகத்தின் வகிபாகம்” என்று கூறும் போது, சுமந்திரன் தமக்கு இந்தியாவுடன் கதைத்தால், கொழும்பில் தனது பார்வை குறையும் என்பது ஞாபகம் வருகிறது.

“19 வது திருத்தத்தை” பற்றியும் கதைக்கிறார்கள். சிங்கள பெரும்பாண்மை ஜனநாயகத்தை பற்றி எம்மக்கு என்ன வேலை. தமிழ் விஷயங்களில் நம் நேரத்தை முதலீடு செய்ய வேண்டும்.

இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சொற்களைக் குறிக்கிறதே தவிர , எந்த செயல்களும் இல்லை. அவர்கள் எந்த நடவடிக்கையும் செய்ய முடியாது, அவர்கள் செய்தால் அவர்களின் சலுகைகள் அனைத்தும் முடிந்துவிடும், ஒருவேளை அவர்கள் பல சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சில வழக்கறிஞர்களால் சட்ட பொறி போடப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டும் வருகிறார்கள் என்பது, இவர்கள் எல்லோரும் ஊமைகளாக இருப்பதிலிருந்து கவனிக்கக்கூடியதா உள்ளது.