கர்மா தமிழ் அரசியல்வாதிகளையும் விடாது என வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் இன்றுடன் 1919 வது நாளை எட்டியுள்ளது. அதனையொட்டி இன்று போராட்ட கொட்டகை முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது

சர்வதேச நாணய நிதியம் வடக்கு கிழக்கில் ராணுவத்தை அகற்றுமாறு நிபந்தனை விதித்தது. தமிழ் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தற்போது இந்தக் கோரிக்கையை தற்போது வலுப்படுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் மே 18 இனப்படுகொலை போராட்டங்களில் ராணுவத்தினருக்கு கஞ்சி கொடுக்கும் நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகின்றன.

ஐநா மனித உரிமை கூட்டத் தொடருக்கு முன்பு அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகம் மற்றும் போராட்ட அமைப்புகள் இலங்கைக்கு உதவி வழங்கும் அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் இந்தியா சர்வதேச நாணய நிதியம் அவுஸ்திரேலியா போன்றவற்றிற்கு வலுவான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். பாதுகாப்பான அரசியல் தீர்வை கோரவேண்டும். இல்லாவிட்டால் கர்மா அனைவரையும் பாதிக்கும்.

நல்லிணக்கம் தெற்கு அரசியலைப் பேசும் அரசியல்வாதிகள் இனப்படுகொலைக்கான நீதிகளை பெறமுடியாது. அதனால் எதிரியை எதிரியாக இருக்கும்போது தான் உலகம் எங்களுக்கு உதவும் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கான நீதியை வழங்கும். அதுதான் தமிழ் மக்களுடைய பாதிக்கப்பட்ட மக்களுடைய காணாமலாக்கப்பட்ட மக்களுடைய உண்மையான தீர்வாக இருக்கும்