நாள் 832
தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்றுகை போராட்டம், வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால்
தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் முற்ற்றுகை போராட்டம்
வவுனியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் ஜூன் 01, 2019 அன்று தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வவுனியாவில் இருந்து வந்த இவர்கள் பல பதாதைகளுடன் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவர்களின் முக்கிய செய்தி “தமிழரசே, உங்களால் இயலாது என்று 2015லிருந்து காட்டிவிட்டீர்கள், இயலாது என்றால் விலகவும். புதிய தலைமுறைக்கு வழிவிவிடுங்கள்.”
* இலங்கை தமிழரசு கட்சியினரால் யாழ்.நகர பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு 40க்கும் மேற்பட்ட பொலிஸார் பேரூந்தில் வரவழைக்கப்பட்ட போதிலும் அவ்விடத்தில் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை.
* இப்போராட்டத்தின் போது மக்களை உள்நுழைய விடாமல் தடுக்கும் நோக்கத்துடன் தமிழரசுக்கட்சியின் அலுவலக முகப்பு வாயில் கதவை கட்சி உறுப்பினர்கள் இழுத்துப்பூட்ட முனைந்ததால் அங்கு முறுகல்நிலை ஏற்பட்டது.
தயவு செய்து இந்த வீடியோவை பார்க்கவும், தமிழ் தேசிய கூட்டணியின் இயலாமையின் பெரும்பகுதியை இது காட்டுகிறது
தமிழ் செய்தி ஊடகத்தின் பெரும்பகுதி. தமிழரசு கடைசியின் அலுவலகத்தின் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தை பற்றிய தொடர்பான இணைப்புகளும் இங்கே:
சுயநிர்ணய உரிமையை விலைநிர்ணயம் செய்யாதே!- தமிழரசுக்கட்சி அலுவலகம் மக்களால் முற்றுகை.
இணைப்பு: http://irruppu.com/?p=111496
தமிழரசுக் கட்சியின் யாழ் அலுவலகத்துக்கு முன்னால் போராட்டம்
இணைப்பு: http://thinakkural.lk/article/29240
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் எடுக்காமல் உள்ளதாக குற்றஞ்சாட்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.
இணைப்பு: https://www.tamilwin.com/community/01/216406