நாள் 898
பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே! நல்லூரில் ஆர்ப்பாட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபனின் நினைவு தூபி முன்றலில் இருந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
தமிழ் தலைமைகளின் சரணாகதி அரசியலை கண்டித்து இன்று காலை இவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தியிருந்தனர்.
முன்னதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் திலீபனின் நினைவுத்தூபிக்கு சுடரேற்றி, மலரஞ்சலி செய்தனர்.
இதனைத் தொடர்ந்து
பௌத்த மேலாதிக்கத்திற்கு அடித்தளம் இட்டது கூட்டமைப்பே!
தமிழர்களுக்கு எதிரான புத்த பயங்கரவாதத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வித்திட்டது
மாவையே , நீர் ஏன் நவற்குழியில் விகாரை கட்ட ஒப்புக்கொண்டீர்
சுமந்திரன் புத்தத்திற்கு முதலிடம் கொடுத்து, பௌத்த மேலாதிக்கத்திற்கு துணை போனார்
சம்பந்தன் மோடிக்கு ஸ்ரீலங்கா புத்த நாடு என்று கூறி, பௌத்த மேலாதிக்கத்திற்கு துணை போனார்
கன்னியாவில் இந்து கோவில் உடைத்து விகாரை கட்ட முயன்றபோது, கூட்டணி ஏன் ஊமையானது
நீராவியடி பிள்ளையார் இடத்தில் விகாரை கட்டியபோது தமிழரின் வாக்கு பெற்ற கூட்டணி ஏன் வாய் பொத்திக்கொண்டது\
தமிழ் தாயகத்தில் விகாரை கட்ட வேண்டாம்.
தமிழ் தலைமையே, “சிங்களவர்கள் வசிக்கும் இடத்தில் விகாரை கட்டலாம்” என சொல்ல வேண்டாம்.
இது தமிழ் தாயகத்தில் அதிகமான சிங்கள குடியேற்றத்தை ஊக்குவிக்கும் .
வவுனியாவின் நெடுங்கெனியில் 4700 சிங்கள குடும்பத்திற்கு ரி.என்.எ உறுதி பத்திரங்களை வழங்கி, பல விகாரைகளை உருவாக்குகின்றது.
வரவு செலவு திடடத்தில்,
ரணிலின் வடகிழக்கு 1000 விகாரைகள்
= (சமன்)
கூட்டமைப்புக்கு பெற்றுக்கொண்ட 2 கோடி லஞ்சம்
காணாமல் ஆக்கப்படோரை கண்டறியவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் , தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் பௌத்த மேலாதிக்கத்திக்கமே தடையாகவுள்ளது.
நேற்று நீராவியடி பிள்ளையார், இன்று கண்ணியா பிள்ளையார், நாளை எந்த கோவில், கூட்டமைப்பே கூறு!
உங்களின் சகோதரம் தாய்மார்கள், காணாமல் ஆக்கப்படவில்லை என்பதாலும் கற்பழிக்கப்படவில்லை என்பதாலும் சிங்கள ஆமி வேண்டும் என விடாப்பிடியாக உள்ளீர்கள்,
தமிழ் அரசுக் கட்சியா? இல்லை.. கொழும்புக்கு ஒரு முகமும் வடக்கு கிழக்குக்கு மறுமுகமும் காட்டும் டபுள் அரசுக் கட்சியா?
காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியவும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் பௌத்த மேலாதிக்கமே தடையாகவுள்ளது. போன்ற பதாகைகளை தாங்கி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் பேரணி நல்லூர் பின்வீதிவழியாக சென்று நல்லூர் ஆலய முன்றலில் நிறைவடைந்தது.