தமிழர்களுக்கான தீர்வை வெளிநாட்டு சக்திகளினூடாகவே பெறலாம்- காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத்தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.**

Link: இணைப்பு (Source):

1

வெளிநாடுகளை அழைப்பதன் மூலமே தமிழர்கள் தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் கூறுகையில், “காணாமல் ஆக்கப்பட்டவர்கள் இல்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறிய கருத்துக்கு நாம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம்.

காணாமற் போனவர்கள் இல்லை என்று சொல்வது நாம் எதிர்பார்த்தது தான். தமிழ் மக்களின் வாக்குகளுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொன்னது. சிங்கள மக்களின் ஆதரவுடன் வந்த அரசாங்கமும் அதனையே சொல்லியிருக்கிறது. வெளிநாடுகள் மூலமே தீர்வினைப் பெற்றுக்கொள்ள முடியும் என்பதை இவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.

அண்மையில் பல்கலைகழக மாணவர்களால் பொங்கு தமிழ் நிகழ்வு நாடத்தப்பட்டிருந்தது. அந்த நிகழ்வை எதிர்வரும் காலத்தில் பெருமளவில் செய்வதாக கூறியிருக்கிறார்கள். அதனை விட நாம் தமிழ் மக்களுக்கான தீர்வை எப்படிப் பெறப்போகின்றோம். என்ன வழியில் பெறப் போகின்றோம் என்பதைத்தான் இந்த அரசியல் தலைமைகள் மற்றும் கல்விச் சமூகமும் கூற வேண்டிய தேவை தமிழ் மக்களுக்கு இருக்கிறது.

எனவே நாம் அனைவரும் ஒருமித்த குரலுடன் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா போன்ற நாடுகளை அழைப்பதன் ஊடாகத்தான் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைப் பெற்றுக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளனர்.