சுமந்திரன் தமிழ் மக்களில் அக்கறையற்றவர்: காணாமல் போனவர்களின் உறவினர்

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்

சுமந்திரன் கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாதவர் அவர் என வவுனியாவில் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

வவுனியாவில் அவர்கள் போராட்டம் மேற்கோள்ளும் இடத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்.

சுமந்திரன் கொழும்பை விரும்புகிறவர். கொழும்பின் விசுவாசி, தமிழ்மக்களில் கொஞ்சமும் அக்கறை கொள்ளாததுடன்,இலங்கை அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் ஒருநபர்.

சேர்பொன் இராமநாதன் போல தன்னையும் சிங்களவர்கள் வண்டிலில் இழுத்துசெல்வார்கள் என்ற நம்பிக்கையிலேயே அவர் பாடுபடுகின்றார்.
யாழ் அரச அதிபரை மாற்றி தமக்கு ஏற்ற ஒருவரை நியமிப்பதற்காகவும்,சீனத்தூதுவரை சந்தித்து வருகின்ற தேர்தலுக்கு நிதியை பெற்றுகொள்வதற்கும், சர்வதேச விசாரணை போன்ற தமிழர்களின் விடயங்களில் வெளிநாட்டு ஈடுபாட்டை தவிர்ப்பதுவுமே கூட்டமைப்பு அரசுடன் இணைவதற்கான காரணமாகவுள்ளது.

தற்போதைய யாழ் அரசாங்க அதிபர் நேர்மை மற்றும் கண்டிப்பான விதிகளை பின்பற்றும் நிலையில் கடந்த பாராளுமன்ற தேர்தலில் முடிவுகளை சாதகமாக்கியது போல வரும் தேர்தலிலும் உதவகூடிய சிலரை சுமந்திரன் விரும்புகிறார்.

எனவே கண்களை மூடிக்கொண்டிருக்க கூடிய ஒரு அரசாங்க அதிபரை அவர் தேடுகின்றார் என்றனர்.

இதேவளை காணாமல் போன தமது பிள்ளைகளை தேடி குறித்த போராட்டங்களில் கலந்துகொண்டு உயிரிழந்தவர்கள் மற்றும் தமது போராட்டங்களுக்கு ஆதரவாக செயற்பட்டு உயிரிழந்த அமெரிக்க இலங்கை மிசனின் முன்னாள் தலைவரும் பாதிரியாருமான ஈனோக் புனிதராயா என்பவருக்கும் இன்றயதினம், மெழுகுதிரி ஏற்றி,மலர்தூவி அஞ்சலியை செலுத்தியிருந்தனர்