இன்று, ராஜ்குமார் காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்காக 1800 வது நாள் தொடர்ச்சியான போராட்டத்தை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை.

இன்று 1700வது நாள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை எப்படி கண்டுபிடிப்பது மற்றும் எதிர்காலத்தில் காணாமல் ஆக்கப்படும் தமிழ் குழந்தைகளை எப்படி நிறுத்துவது?

நாம் பின்வருவனவற்றை செய்ய வேண்டும்:

 1. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் டிஎன்ஏவை (DNA) பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை அடையாளம் காணவும் நாங்கள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லது அமெரிக்காவிடம் கேட்க வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை தேடும் போராட்டத்தின் போது 101 தமிழ் தாய் தந்தையரை இழந்துவிட்டோம்.
 2. இலங்கை, இந்தியா, மாலத்தீவு மற்றும் மலேசியாவிக்கு கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க அமெரிக்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சர்வதேச விசாரணை நடத்த நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும்.
 3. அமெரிக்க கேபிள் செய்தியின் படி, இந்த தமிழ் குழந்தைகளை அடிமைத் தொழிலாளர்கள் மற்றும் பாலியல் அடிமைகளாக எங்கு அனுப்பினார்கள் என்பதையும், அவர்களுக்கு இப்போது என்ன நடக்கிறது என்பதை அறிய சர்வதேச விசாரணைக்கு நடத்தப்பட வேண்டும்.
 4. தமிழர்களின் விவகாரங்களில் சிங்களம் தலையிடுவதை நிறுத்த எங்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு தேவை. இது எங்கள் நிலம், இவர்கள் எங்கள் மக்கள்.
 5. வடகிழக்கு தமிழர் தாயகத்துடன் பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட மற்றும் திரும்பப்பெற முடியாத. அரசியல் தீர்வு வேண்டும்.

எனவே, தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் சிவில் சமூகம் மற்றும் தமிழ் புலம்பெயர் அமைப்புகளை நிரந்தரமான அமைதி மற்றும் நிரந்தரமான அரசியல் தீர்வை அடைய தமிழர்களின் ஒருங்கிணைந்த கொள்கையில் கையெழுத்திடுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

தமிழர்களை ஒன்றிணைப்பது கடினம் , ஆனால் 1940 களில் யூதர்கள் செய்ததைப் போல, தமிழர்களை ஒருங்கிணைக்கும் அரசியல் கொள்கைகளுடன் வழிநடத்துவது எளிது.

இங்கே தமிழர்களை ஒருங்கிணைக்கும் கொள்கைகள்:

 1. தமிழர்களின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஐ.நா கண்காணிப்புடன் பொது வாக்கெடுபு
 2. பாதிக்கப்பட்ட தமிழ் இனத்தவர்களுக்கு இழைத்த இனவழிப்பு மற்றும் ஏனைய சர்வதேச குற்றங்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான சர்வதேச விசாரணை.
 3. தமிழர்க்கான அரசியல் தீர்வு, ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட, மீள பெறப்பட முடியாத தமிழர் தாயகத்தை அடிப்படையாக கொண்டது.
 4. காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிப்பதற்கு அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல்.
 5. அரசியல் தீர்வு பற்றி இலங்கை அரசாங்கத்துடன் பேசமாட்டோம் என்று வாக்குறுதி அளிக்கவும், நாம் இன்னும் 74 வருடங்கள் ஏமாறக்கூடாது.
 6. தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கு இடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவை மத்தியஸ்தர்களாக நாம் பயன்படுத்த வேண்டும்.
 7. மேற்கண்ட கொள்கைகளை யாரும் மீறக்கூடாது.

அடுத்த வாரம் தொடங்கி, வவுனியா, எ-9 வீதியில் அமைந்துள்ள எங்கள் போராட்ட பந்தலில் படிவம் தயாராக இருக்கும்.

இந்த படிவங்களை அனைத்து புலம்பெயர்ந்த தமிழ் குழுக்களுக்கும், தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் சிவில் சமூகத்திற்கும் அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.

25,000 க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் இந்த தாய்மார்களுடன் ஒத்துழைக்குமாறு அனைவரையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி,

G . ராஜ்குமார்
தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க
செயலாளர்

oct4

oci3

oct2

Thank you,

Tamil Diaspora News, USA