தமிழரின் சர்வதேச நீதிக்கு எதிராக சுமந்திரனுடன் இணைந்து சதி செய்த BTF , USTPAC, CTC , ATC க்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு தகுதி இல்லை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள்

இணைப்பு (Source): https://www.tamilwin.com/community/01/246184?ref=home-feed

Screen Shot 2020-05-15 at 11.07.18 PM

 

காணாமலாக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் செயலாளர் திரு ராஜ்குமார் அவர்கள் செவ்வி ஒன்றை வழங்கி இருந்தார். அதில் மே, 18 அன்று இரவு 7 மணிக்கு அனைத்து ஈழத்தமிழ் உறவுகளும் தத்தமது வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு தீபங்கள் ஏற்றி அஞ்சலி செய்யும் வண்ணம் கேட்டுக்கொண்டார்.

அதனை புகைப்படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து இதன் மூலம் சர்வதேசத்திடம் எமக்கான நீதி வேண்டி நிற்பதற்கான பொறிமுறையை உருவாக்கும் வண்ணம் கேட்டுக் கொண்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,  தமிழரின் சர்வதேச நீதிக்கு எதிராக சுமந்திரனுடன் இணைந்து சதி செய்த BTF , USTPAC, CTC , ATC , இவர்களுக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் செய்வதற்கு தகுதி இல்லை.

தமிழர்களின் இனப்படுகொலை நடந்த முள்ளிவாய்க்கால் நினைவை , தமிழர்களுக்கு சர்வதேச நீதிக்கு பெறுவதற்கு எதிராக பணியாற்றிய, USTPAC , BTF , CTC , ATC குறிப்பாக UNHRC இல், இலங்கைக்கு போர் குற்றதிலிருந்து தப்புவதற்கு இரண்டு முறை சிறிலங்காவுக்கு கால அவகாசம் கொடுக்க சுமந்திரனுடன் கடுமையாக உழைத்த இவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நடத்த தகுதியற்றவர்.

இந்த நிறுவனங்கள் USTPAC , BTF , CTC , ATC, சுமந்திரன் தனது கொள்கையை மேம்படுத்துவதற்காக இந்த அமைப்புகள் தன்னுடன் இணைந்து பணியாற்றியதாக அண்மையில் நடந்த சிங்கள தொலைக்காட்சி நேர்காணலில், சுமந்திரன் இந்த அமைப்புகளின் பெயரை பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. என்று தெரிவித்தார்.

Screen Shot 2020-05-15 at 11.10.15 PM

Link from Tamil Diaspora News:

http://www.tamildiasporanews.com/the-btf-ustpac-ctc-atc-which-conspired-with-sumanthiran-against-the-international-justice-for-the-tamils-are-not-eligible-to-do-mullivailkal-memorial-service/