யாழ் பொதுநூலகம் எரிப்பின் நினைவு தினம் வவுனியாவில் அனுஸ்டிப்பு!

யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.

வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொது நூலக நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர்.

TN1 TN2 TN3 TN4 TN5