Screen Shot 2019-06-12 at 8.02.43 AM

Screen Shot 2019-06-12 at 8.03.02 AM

Screen Shot 2019-06-12 at 8.02.05 AM

Screen Shot 2019-06-12 at 8.03.02 AM

Screen Shot 2019-06-12 at 8.00.46 AM

ஜனாதிபதியின் வருகைக்கு எதிராக வவுனியாவில் காணாமல்போனோரின் சொந்தங்கள் போராட்டம்

காணாமல் போனவரின் உறவுகளின் பேச்சாளர் திரு. கோபாலகிரிஷ்ணன் ராஜ்குமார், இந்த மைத்திரியின் வருகைக்கு எதிரான பேரணியில் கீழ் வரும் செய்தியை, நேற்று செய்வாக்கிழமை 11ம் திகதி வவுனியாவில் செய்தியாளர் முன்னிலையில் வெளியிட் டார்:

இன்று நாம் ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றோம். தமிழர்களின் வாக்குகள் பெற்று அவர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சிங்கள, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்வாதிகள் தமிழர்களையும் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களையும் சாதகமாக்கிக் அரசியல் லாபம் கொள்வதைப் பார்க்க வருத்தமாக உள்ளது.

தமிழருக்கு நல்லிணக்கம் என்பது ஒரு போலி கருத்து. சிங்கள பௌத்த சின்னத்தை தமிழர் நிலத்தில் நிறுவவும் , தமிழர்களின் நிலத்தை கைப்பற்றவும் சிங்கள அரசாங்கம் நல்லிணக்கம் என்று கூறுகிறது.

நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழர்களுக்கு எதுவும் நடக்கவில்லை.

ஸ்ரீலங்கா இராணுவத்தால் எந்த நிலமும் விடுவிக்கபடவில்லை

இலங்கை இராணுவத்தால் தொடர்ந்தும் தமிழரின் பெரும்பாலான பொருளாதாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கற்பழிப்பு மற்றும் காணாமற் போகும் சம்பவங்கள் இன்னும் நடக்கிறது.

வட-கிழக்கு இணைப்பு நடக்கவில்லை.

தமிழருக்கு சமஷ்டி இல்லை.

நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணக்காரர்களாக ஆனார்கள். அவர்கள் தேர்தலில் தங்கள் வாக்குறுதியை மறந்துவிட்டார்கள்.

நல்லிணக்கம் என்ற பெயரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச விசாரணைகள், கிழக்கை முஸ்லிம்ககளுக்கு கைவிட்டு, சமஷ்டி அமைப்பை கைவிட்டு, முன்னணி மதமாக புத்தத்தை தழுவி, ஏக்க்கி ராஜஜியை ஏற்றுக் கொண்டனர் .

இந்த நல்லிணக்கம் கருத்து தமிழ் மக்களை ஒடுக்குவதற்கான ஒரு சதி ஆகும்.

வவுனியாவில் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய கொடிகளை தாங்கியவண்ணம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம்

பதவியை விட்டு விலகுவதற்கு முன் பிள்ளைகளை காட்டுங்கள் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்

ஜனாதிபதிக்கு எதிராக வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் ஆர்ப்பாட்ட பேரணி