Screen Shot 2019-07-07 at 3.01.03 AM

தமிழரசின் மன்னிப்பும், ராஜினாவும்: காணாமல் போனோரின் முதுமைபட்ட தாய்மார்களை தமிழ் அரசு கட்சி ஏலனம் செய்தார்கள் ; எனவே தமிழ் அரசு மன்னிப்பு கேட்டு, தமிழர்களை பிரதிநிதிபடாது விலக வேண்டும்

தமிழரசு செய்தது “மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு” ஒப்பானது

வீரசிங்கம் மண்டபத்தின் முன் நடந்த தமிழ் அரசு கட்சி மகாநாடு நடந்த போது வவுனியா தாய் உறவுகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு தமிழ் அரசு கட்சி தமிழருக்கு எதிராக செய்த துரோகங்களை எதிர்த்து கோஷமிட்டு கொன்று இருந்தார்கள்.

இந்த தாயமார்களின் முக்கிய கோஷங்கள்:

  1. சம்பந்தனின் ஒன்று பட்ட, ஒருமித்த, பிளவு படாத, பிரிக்க முடியாத நாட்டுக்குள்ளே தான் எமக்கு தீர்வு என்பது, ராஜதந்திரம் இல்லை. இது சிங்களத்தை நக்கி போக்கற்ரை நிரப்பும் தந்திரம் .
  2. கூட்டமைப்பு புத்தமதத்திற்கு முதன்மையான இடத்தைக் கொடுத்து, தமிழரின் பூர்வீக மண்ணை சிங்களமயமாக்குவது. அதாவது இது ஒரு இன அழிப்பு. யார் தமிழ் அரசு கட்சிக்கு புத்தத்திற்கு முதலிடம் கொடுக்க உரிமை கொடுத்தது.
  3. சுமந்திரன் ஓற்ரைஆட்சிக்குள் சமஸ்டி புதைந்துள்ளது என்கிறார் . அதற்க்கு பெயர் பலகை தேவை இல்லை என்கிறார். இது தமிழருக்கான தீர்வில்லை, இது தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்கள் விரும்பும் தீர்வு
  4. தேர்தலின் போது நீங்கள் வடகிழக்கு இணைப்பு என்றுறீர்கள் . இப்போது நீங்கள் ஏன் வடகிழக்கு பிரிவினையை ஏற்றுக்கொண்டீர்கள்?
  5. தேர்தலில் சமஷ்டி தீர்வுக்கு வாக்களித்த தமிழர்களை ஏமாற்றி, ஏன் எக்கிய ராஜ்சியவை (சிங்கள ஒற்றரை ஆட்சியை ) ஏற்றிர்கள்
  6. தமிழரை கற்பழிக்கும், சூறையாடும் சிங்கள ராணுவத்தை, ஏன் தமிழரை பாத்து காக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள்
  7. உங்கள் சகோதரம், தாய்மார்கள் காணாமல் ஆக்கப்படவில்லை என்பதாலும் கற்பழிக்கப்படவில்லை என்பதாலும், சிங்கள ஆமி வேண்டும் என்று விடாப்பிடியாக உள்ளீர்கள்

இந்த கோஷங்களை பொறுக்க முடியாத தமிழ் அரசு கட்சியினர் , இந்த காணாமல் போனவரின் உறவினர்கள் சாரயம் குடித்த பின்னர் கோஷமிடுகின்றனர் என்று குற்றம் சாட்டினர். தமிழ் அரசு கட்சி இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் குடிபோதையில் வந்து இந்த வயதான தாய்மார்கள் ஏசி குற்றம் சாட்டினர்.

இந்த தமிழ் தாய்மார்களிடம் அவர்கள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும்.

தமிழ் அரசு கட்சியினர் தாயமார்களை சாராயம் குடித்துவர்கள் என் அழைத்ததை அடுத்து, கோபமடைந்த இந்த தாய்மார்களை அமைதிப்படுத்த தமிழ் அரசு உணவு பார்ஸலை கொடுத்து ஏலனம் செய்ய முயன்றார்கள். தாய்மார்கள் இந்த உணவு பர்ஸலை வேண்டாம் என்று மறுத்தார்கள்.

தமிழ் தாய்மார்களின் சத்தியாகிரக ஆர்ப்பாட்டத்தை தமிழ் அரசு கட்சி அவமதித்தது

தமிழ் அரசு சிங்களத்தின் நல்லிணக்கம் என்ற பெயரில், கொழும்பு அரசாங்கத்துக்கெதிரான அனைத்து ஆர்ப்பாட்டங்களையும் நிறுத்த முமுயல்கிறது.

தமிழ் அரசு இளைஞர் பிரிவு உறுப்பினர்களில், மகா நாடு முடிந்த பின்னர், பெரும்பாலோர் சாரயம் குடித்த பின்னர் , தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த வயதான தமிழ் தாயமார்களுடன் விவாதம் நடத்தினர். இந்த தமிழ் அரசு உறுப்பினர்கள் சிலர் வெவ்வேறு உச்சரிப்புடன் தமிழைப் பேசினர்.

இவர்கள் யாராக இருக்க முடியும்:

  1. முஸ்லிம்களாக இருக்க முடியும். சுமந்திரன் அவரது முஸ்லீம் கும்பலிலிருந்து அழைத்து வந்தவராக இருக்க முடியும்.
  2. சிங்களவர்ளாக இருக்க முடியும், அவர்கள் நெடுங்கெரனியில் இருந்து வந்திருக்கலாம், அங்கு சுமந்திரன் மற்றும் செல்வம் அடைகலநாதன் ஆகியோர் 4000 சிங்களவர்களுக்கு நில உடைமைக்கு உறுதி வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. இந்தியர்ளாக இருக்க முடியும்,, மாவை கொண்டு வந்திருக்கலாம்.

இந்த தாய்மார்கள் தமிழ் தாயகம் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் அவர்களுக்கு புதியது அல்ல. அவர்கள் இன்னும் சுழற்சி முறையில் உண்ணாவிரதத்தில், 850 நாட்களுக்கு மேலாக இருக்கிறார்கள்.

அவர்கள் கணவன், மகன்கள் மற்றும் மகள்களை இழந்து, இழந்ததால் வருமானத்தை இழந்தனர். இந்த தமிழ் தாய்மார்கள் ஒரு நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள். காணாமல் போன அவர்களின் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிப்பது அவர்களுக்கு முக்கியமானது. இவர்கள் இந்த கஷ்டத்துக்குலும், விடாது போராட் டம் செப்பவர்கள்

தமிழ் அரசு கட்சி அவர்களின் வலியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.காணாமல்போனவர்களை கண்டுபிடிக்க தமிழ் அரசு கட்சிக்கு 10 ஆண்டுகாலம் இயலாமால் போனதை ஏற்றுக்கொண்டு, தமிழ் பிரதிநிதித்துவத்தைத் ராஜினாமா செய்ய வேண்டும். .

மாவை வெளியே வந்து இந்த வவுனியா தாய்மார்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

சம்பந்தன் ஒரு நோயியல் பொய்யர் (Pathilogical L liar )என்பதால் சம்பந்தனின் மன்னிப்பு ஏற்க முடியாது.

சுமந்திரனின் மன்னிப்பையும் ஏற்க முடியாது, ஏனென்றால் அவர் ரணிலுக்கும் யு.என்.பி.க்கும் சாதகமா எதையும் செய்வார்.

இந்த மன்னிப்பு பிறகு, தமிழ் அரசு கட்சி தமிழ் அரசியலை மரியாதையுடன் விட்டுவிட வெளியேற வேண்டும். அடுத்த தலைமுறை தமிழர்களுக்கான இடத்தை விட்டு கொடுத்து, வீட்ல் ஓய்வு பெற வேண்டும். மரத்திலிருந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதற்கு ஒப்பானது

நன்றி,
ராமப்புக்கான தமிழர்கள்
வாஷிங்டன், அமெரிக்கா