காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டறியவும் எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களை காப்பாற்றும் தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவிகளை பெறுவதற்கான எமது தொடர்ச்சியான போராட்டத்தின் 2156 நாள் இன்று.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களாகிய நாங்கள் தைப் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறோம்.
விரைவில் ஒரு நாள் இந்த திருநாளை நாம் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவோம்.

இரண்டு முக்கிய இராணுவ மேஜர்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் பயணத் தடையுடன் வேறு பல நிபந்தனைகளை விதித்தது. சுமார் 2 வாரங்களுக்கு முன்னர், இலங்கையின் முன்னாள் இரண்டு ஜனாதிபதிகளுக்கு கனடா தடை விதித்தது.

இந்த இரண்டு ஜனாதிபதிகளுடன் தொடர்புள்ள எந்தவொரு கனேடியர்களும் தண்டிக்கப்படுவார்கள் என்பது மிகவும் கவனிக்கத்தக்கது.

இவையெல்லாம் நம் மக்களுக்கு என்ன சொல்கின்றன?

உலகமே தமிழர்களின் பின்னால் நிற்கிறது, ஆனால் முதுகெலும்புள்ள தலைவர் எமக்கு இல்லை.

எமது தாய்மார்களுடன் இணைந்து தமிழ் இறையாண்மைக்காக யாரேனும் ஒருங்கிணைத்து குரல் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம்.
இறையாண்மை என்பது ஒரு கெட்ட வார்த்தை அல்ல, அது ஒரு நட்பான எளிமையான சுதந்திர வார்த்தை.

குறிப்பாக அமெரிக்காவுடன் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்தை வலியுறுத்துமாறு எமது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்துகிறோம்.

கொழும்பைக் கண்டு பயந்தால் அமெரிக்காவிடம் பேசுங்கள்.

USTAG மற்றும் அவர்களது நண்பர்கள் இலங்கை இராணுவத்தை 25% குறைக்க விரும்புகிறார்கள், ஆனால் தமிழர் தாயகத்தில் இராணுவ பிரசன்னத்தை இலங்கையால் கையாள முடியாது. அவர்களிடம் பணம் எதுவும் இல்லை. இப்போது அவர்களே இராணுவத்தை 50% குறைக்கிறார்கள் என்பதை நேற்று அறிவித்துளார்கள்.

USTAG மற்றும் அவர்களது நண்பர்கள் அமைதியாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் இறையாண்மையைப் பெறுவதற்கான வழியைக் கண்டறிய வகுப்புகள் எடுக்க வேண்டும்.

சீன ஆதிக்கத்தை ஒடுக்க அமெரிக்கத் தலைமையுடன் இந்தியப் பெருங்கடலைப் பாதுகாக்கும் நாடுகள் “குக்” தீவுகளுக்கு இறையாண்மையை வழங்கின.

இங்கும் இறையாண்மைக்கான வலுவான சாத்தியம் உள்ளது.

நன்றி
கோ.ராஜ்குமார்
செயலாளர் தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம்.