2

இணைப்பு (Source):: https://www.einpresswire.com/article/512568039/

1

தமிழரிடம் சமஷ்டி இருந்திருந்தால், கொரோனாகிருமியை கட்டுப்படுத்த மிக இலகுவாய் இருக்கும்: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

VAVUNIYA, NORTHERN PROVICE, SRI LANKA, March 20, 2020 /EINPresswire.com/ — கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பு பெறுவோம்! காணாமல் ஆக்கப்பட்டாேரை தேடிக்கண்டறியும் உறவுகள் விழிப்புணர்வு நடவடிக்கை.

வவுனியாவில் ஆயிரத்து நூறு நாட்கள் கடந்தும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வரும் “தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிக்கண்டறியும் சங்கத்தினர்” தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி உயிர் அச்சுறுத்தலையும், மரணத்தையும் ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் கிருமியின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரை தேடிக்கண்டறியும் உறவுகளால் வவுனியாவில் நடத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் கடந்த 18.03.2020 புதன் கிழமை அன்று ஆயிரத்து நூற்று இருபத்தைந்து நாட்களை (1125) எட்டியுள்ள நிலையில், தமது போராட்ட கொட்டகைக்கு முன்பாக ஏ9 வீதியால் பயணிக்கும் முதியவர்கள், சிறுவர்கள், தாய்மார்கள் எனப் பொதுமக்கள் பலரும் கைகளை நன்கு சவர்க்காரமிட்டு கழுவிச் சுத்தமாக இருப்பதற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாங்கி வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.

இந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பில் தமிழர் தாயக சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார் கருத்து தெரிவிக்கையில்,

இந்த பயங்கர கொரோனோ வைரஸ் உலகம் முழுவதும், குறிப்பாக நமது தமிழர் தாயகத்திற்கு பரவுவதைக் கண்டு வருத்தப்படுகிறோம்.

இந்த ஆபத்தான நேரத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூற எங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை. சிங்கள கொழும்பு அரசாங்கத்திடமே அனைத்து கட்டுப்பாடுகளும்.

எங்களிடம் உண்மையான சமஷ்டி இருந்தால், இந்த கொரோனா வைரஸின் பரவலை எவ்வாறு தடுப்பது என்பதில் எங்களுக்கு அதிகாரம் இருக்கும்.

அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். சொந்த மாநில அதிகாரத்துடன் 50 மாநிலங்கள் உள்ளன. வாஷிங்டன் அரசாங்கத்திற்கு இந்த மாநிலங்களை கட்டுப்படுத்த எந்த அதிகாரமும் இல்லை.

அமெரிக்காவில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நியூயோர்க் மாநிலம் எல்லாவற்றையும் செய்து வருகிறது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த நியூயோர்க் அண்டை மாநிலங்களுடன் பேசுகிறது. இது கூட்டாட்சி வாதத்தின் சக்தி.

கூட்டாட்சி என்றால் என்ன என்பதை நமது அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த அரசியல்வாதிகள் மற்றும் புத்திஜீவிகள் சமஷ்டி என்றால் கொழும்பு பிரதிநிதி ஆளுநருக்கு அதிகாரம் கொடுப்பதை பற்றி பேசுகிறார்கள். சம்ஷ்டி என்றால் கொழும்பு பிரதிநிதி ஆளுநர் இருக்கக்கூடாது . அவர்களின் பரிந்துரை கூட்டாட்சி வாதத்தின் பொதுவான கொள்கையுடன் இணங்கவில்லை என்று தெரிவித்தார்.